ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பத்து வருடங்களாக பணிபுரியும் உணவு விநியோகஸ்தரான (food delivery rider) மன்ஷார் அப்பாஸ் என்பவர் எகிப்திய குடும்பம் ஒன்றினை பெரும் சோகத்திலிருந்த மீட்டமைக்கா அவரின் நேர்மையையும், அன்பையும் தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பத்து வருடங்களாக பணிபுரியும் உணவு விநியோகஸ்தரான (food delivery rider) மன்ஷார் அப்பாஸ் கடந்த வாரம் ஷார்ஜா பல்கலைக்கழக நகர (Sharjah University City) பகுதியில் உணவு டெலிவரி செய்யச் சென்ற வேளையில் ஷார்ஜாவின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் சாலையின் நடைபாதையில் பெண் ஒருவரின் கைப்பை ஒன்று கிடப்பதைக் கண்டெடுத்த மன்ஷார் அப்பாஸ் பையின் உரிமையாளர் அவ்விடத்திற்கு வருவார் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவ்விடத்திலேயே சிறுது நேரம் காத்திருந்திருக்கிறார்.
இருந்தும் அவ்விடத்திற்கு யாரும் வராமைமையில் அப் பையினை திறந்து பார்த்திருக்கிறார் அதில் 20 ஆயிரம் திர்ஹம் பணமும் சில முக்கிய ஆவணங்கள், ஐடி காட்கள் போன்றனவும் இருந்துள்ளது மேலும் அதில் தொலைபேசி இலக்கமும் இருந்தமையினால் பையை திருப்பி ஒப்படைப்பதற்காக அவ்விலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டுள்ளார். 10 தடவைக்கு மேலம் அழைப்பெடுத்தும் யாரும் பதில் தரவில்லை, இதனால் அந்தப் பையில் இருந்த மற்றொரு தொலைபேசி இலக்கத்தின் வாட்ஸ்அப் நம்பருக்கு பையை புகைப்படமெடுத்து அனுப்பி உங்கள் பையை நான் கண்டெடுத்துள்ளேன் என இடத்தினையும் கூறி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதற்குப் பிறகு தாய்-மகன் என அடங்கிய எகிப்திய குடும்பம் ஒன்று பதில் வழங்கி அது தங்களின் பை எனக் கூறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அப்பாஸின் நேர்மையினைப் பாராட்டியும் உள்ளனர். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், எங்கள் அம்மா பல்கலைக்கழத்தில் வைத்தியத் துறையில் கல்வி கற்கும் எனது சகோதரிக்கு பணம் கட்டுவதற்காக அப்பணத்தினை எடுத்துச் சென்ற போது அதனை தவறவிட்டுள்ளார் அதற்காக எனது அம்மா மிகவும் மன கவலையடைந்திருந்தார், சோகத்தில் மன உளைச்சலுக்கும் ஆளாகியிருந்தார் இருந்தும் இறைவன் எங்களை கைவிடவில்லை அப்பாஸ் மூலமாக எங்களின் பணம் திருப்பக் கிடைத்துள்ளது என அப்பாசை வெகுவாக மெச்சி தங்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மன்ஷார் அப்பாஸின் இத்தகைய செய்கையை சமூகவலைத்தளத்தில் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.