34 வயதான ஆசிய நாடுகளில் ஒன்றைச் சேர்ந்த ஒருவருக்கு துபாய் குற்றவியல் நீதிமன்றம் தனது முன்னாள் காதலியின் தொலைபேசியைத் திருடி அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை தனது முகநூல் கணக்கில் வெளியிட்டதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குறித்த நபர் தனது முன்னாள் காதலியுடன் எடுக்கப்பட்ட அந்தரங்கப் புகைப்படங்களை முன்னாள் காதலியின் கணவர் மற்றும் அவரது சகோதரருக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.
இந்த வழக்கு கடந்த ஜூலை 2021 க்கு முந்தையது, தனது தொலைபேசி திருடப்பட்டு அதிலிருந்த அந்தரங்க புகைப்படங்களை தனது முன்னாள் காதலன் திருடி பழைய உறவை தொடர விரும்புவதாகவும் இல்லையேல் புகைப்படங்களை முகநுாலில் பதிவிடப் போவதாக மிரட்டுவதாகவும் பெண் ஒருவர் போலிஸில் புகார் அளித்தமைக்கு இணங்க விசாரனைகள் இடம் பெற்றுள்ளது.
விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண் முன்னாள் காதலருடன் நெருங்கிய உறவில் ஈடுபட்டதை வெளிப்படுத்தியுள்ளார், இதனால் அப் புகைப்படங்களை வைத்துக் கொண்டு திருமணத்திற்குப் பிறகும் உறவைத் தொடரும்படி தனது முன்னாள் காதலன் கட்டாயப்படுத்தியதாகவும், இதற்கு தான் தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம், எனக்கு திருமணம் ஆகிவிட்டது என கூறிய போதிலும் புகைப்படங்களை வைத்து மிரட்டி வருவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் இது தொடர்பில் கூறுகையில், தான் தனது மனைவியுடன் இருக்கும் போது தனது தொலைபேசிக்கு வந்த போட்டோக்களைக் கண்டு வியப்படைந்ததாகவும், விஷயம் குறித்து மனைவியிம் விசாரித்தபோது, அவரது தொலைபேசி திருடப்பட்டதாகவும், அவர் தனது முன்னாள் காதலனினால் மிரட்டப்படுவதாகவும் தெரிவித்ததாக போலிஸில் தெரிவித்துள்ளார.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் காதலன் அந்த பெண்ணின் உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் படங்களையும் செய்திகளையும் அனுப்பியதையும், அவற்றை பேஸ்புக்கில் வெளியிட்டதையும் ஒப்புக் கொண்டதையடுத்து நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது, தண்டனையை அனுபவித்த பிறகு அவர் நாடுகடத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.