பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்கக்கோரி இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும்(NFGG) பங்கேற்பு.
தமிழரசு கட்சியின் வடகிழக்கு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக்கோரும் கையெழுத்துப்
போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் 27.02.22 நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, மட்டக்களப்பு காந்திப்பூங்கா சதுக்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) சார்பில் அதன் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான்,பொதுச்செயலாளர் ALM.சபீல் நளீமி,மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் சியாட், காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள் பஹ்மியா ஷரீப், ஜம்ஹுத் நிஷா மசூத் ஆகியோர் உட்பட NFGGயின் செயற்குழு உறுப்பிர்கள், மகளிர் பிரிவு சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டு தங்களது கையெழுத்துக்களையும், கருத்துக்களையும் பதிவு செய்திருந்தனர்.
மேற்படி நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் MSM. அமீரலி, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மறை.மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம், இந்து, இஸ்லாமிய மதத்தலைவர்கள், தமிழ்-முஸ்லிம் மக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.
தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவரும் இக்கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வுகளுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தொடர்ச்சியான தனது ஆதரவினை வழங்கிவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.