Ads Area

ஷண்முகா ஆசிரியை காலைக்கதிர், தினக்குரல் பத்திரிகைகளுக்கு எதிராக நஷ்ட ஈடு கோரிக் கடிதம்.


Raazi Mohamed.

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு கடமையேற்கச் சென்று கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அது சம்பந்தமாக செய்தி வெளியிட்ட காலைக்கதிர் மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் பொய்யான தகவலை வெளியிட்டதாகக் கூறி ஒவ்வொரு பத்திரிகையிடமிருந்தும் தலை பதினைந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரி குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி அஸ்ஹர் லதீப் அவர்கள் மூலம் கோரிக்கைக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளார்.

குறிப்பிட்ட கடிதங்களில் காலைக்கதிர் பத்திரிகை 3ம் திகதிப் பதிப்பிலும் தினக்குரல் இணையத்தளத்திலும் குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றி வெளியிடப்பட்ட செய்திகளில் தான் ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முகமூடி அணிந்து சென்றதாக சொல்லப்பட்டிருந்ததாகவும், தான் தனது வாழ் நாளிலே முகமூடி அணியல்லை எனவும்  குறிப்பிட்டுள்ளார்.மேலும் இப் பொய்யான செய்தியானது தனது கௌரவத்திற்கும் மானத்திற்கும் பங்கம் விளைவித்தமையினால் தனக்கு நஷ்ட ஈடாக இரண்டு பத்திரிகைகளிடமும் தலா பதினைந்து லட்சம் நட்ட ஈடு கோரியுள்ளார்.

குறிப்பிட்ட கோரிக்கைக் கடிதங்கள் குரல்கள் இயக்க சட்டத்தரணி அஸ்ஹர் லத்தீப் அவர்களினூடாக இரு பத்திரிகை ஆசிரியர்லளுக்கும் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe