தகவல் - சம்மாந்துறை அன்சார்.
எமிரேட்டில் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்துவதற்காக கடந்த ஒரு வார காலத்தில் மாத்திரம் அமீரக அஜ்மான் போலிஸார் 45 பிச்சைக்காரர்களை கைது செய்துள்ளனர்.
அனுதாபத்தை காட்டி மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை ஒழிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அஜ்மான் காவல்துறையினால் கடந்த ஜனவரி கடைசி வாரத்தில் அரபு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 45 பிச்சைக்காரர்களை (28 ஆண்கள், 16 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை) கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பில் அஜ்மான் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் அஹ்மத் சயீத் அல் நுஐமி கூறுகையில், சமூகங்களில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், சமூகக் கட்டமைப்பிற்கும் அமைதிக்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு சட்ட விரோதமான நடைமுறைகளையும் அனுமதிக்கப் போவதில்லை எனக் கூறினார்.
லெப்டினன்ட் கர்னல் அல் நுஐமி மேலும் கூறுகையில், பிச்சைக்காரர்களின் தோற்றத்தின் அடிப்படையில் அனுதாபத்துடன் அவர்களை மகிழ்விக்க அவர்களிடம் பணத்தினை கொடுக்க வேண்டாம் அதற்குப் பதிலாக 067034310 என்ற எண்ணில் புகார் தெரிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
அவர்களுக்குப் கொடுக்கும் பணத்தினை தொண்டு நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கு நன்கொடையாக வழங்குமாறும் அவ்வாறு வழங்கும் பணம் பாபட்சமின்றி அவர்களின் நலன்களுக்காக சென்றடையும் எனவும் தெரிவித்தார்.