முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் நுன்னறிவு நிலை (IQ) குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் நிதியமைச்சர் வெளியிட்ட ஊடகம் ஒன்றுக்கு நேர்கானல் வழங்கிய போது அவர் குறிப்பிட்ட “கபுடாஸ் விமானத்தை மோதிவிட்டது” என்ற ஒரு பகுதியைக் குறிப்பிட்டு கம்மன்பில இவ்வாறு குறிப்பிட்டார், பின்னர் அது சமூக ஊடகங்களில் கேலிக்குள்ளானது. "இது நாம் சிரிக்க வேண்டிய ஒன்று அல்ல, இது நாம் அழ வேண்டிய ஒன்று. எங்கள் வீடுகளில் ஆங்கிலம் பேசப்படுவதில்லை.
"நல்ல நுண்ணறிவு அளவைக் கொண்ட ஒருவரால் ஒரு மொழியை விரைவாகக் கற்றுக்கொள்ள முடியும். ஒரு உதாரணத்திற்கு, கணிசமான கல்விப் பின்புலம் இல்லாத தொலைதூர கிராமங்களில் இருந்து வரும் பெண்கள், வீட்டு வேலையாட்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற 6 மாதங்களில் மிகவும் சரளமாக அரபு மொழியைப் பேசக் கற்றுக்கொள்கிறார்கள்.
அதே போல் படகுகள் மூலம் இத்தாலிக்கு சட்டவிரோதமாக குடியேறும் ஆண்களுக்கு இதேபோன்ற உதாரணத்தை மேற்கோள் காட்டிய கம்மன்பில, 1997 இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஒருவருக்கு, இத்தனை வருடங்கள் கடந்தும் அந்த நாட்டின் தாய்மொழியை பேச முடியாத நிலையானது அவரது நுண்ணறிவு நிலையினை எடுத்துக் காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.
"ஒரு மொழியைப் புரிந்துகொள்ள முடியாத ஒருவர், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் சிக்கலான செயல்முறையை எவ்வாறு கையாள முடியும்? இவ்வாறான ஒரு நபர், வரலாற்றில் மிகவும் நெருக்கடியான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதாரத்தை வழிநடத்திச் செல்வது மிகவும் ஆபத்தான நிலைமையல்லவா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.