Ads Area

சாய்ந்தமருதை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் இளம் தாயை காணவில்லை - கண்டவர்கள் அறியத் தருமாறு வேண்டுகோள்.

 நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொலிவேரியன் கிராமத்தில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயான அப்துல் கபூர் பர்ஸானா (வயது - 34) எனும் இளம் குடும்பப் பெண்ணை கடந்த 2022.01.29ம் திகதி முதல் காணவில்லை. காணாமல் போன அன்று அரிசி வாங்கி வருவதற்கென  கடைக்கு சென்ற அப்பெண்மணி அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற பேருந்தில் ஏறி சென்றதாக அப்பெண்ணை இறுதியாக கண்டவர்கள் தெரிவித்ததாகவும் இரண்டு மாதங்களை அண்மித்தும் இன்னமும் அவர் வீடு திரும்பவில்லை என இவரது தந்தை அப்துல் கபூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இப்பெண்மணி தொடர்பாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கணவனை சிறிது நாட்களாக பிரிந்து வாழும் மனநோயாளியான இந்த தாயின் பிரிவினால் மூன்று மாத கைக்குழந்தை உட்பட சிறிய பிள்ளைகள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.  தாய்ப்பால் கூட இல்லாமல் தாயினுடைய தாயின் பராமரிப்பில் உள்ள கைக்குழந்தை அழுதவண்ணம் உள்ளதால் இந்த இளம் தாய் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் அல்லது இவரை பார்த்தாலோ அல்லது இவரைப் பற்றி தகவல் அறிந்தாலோ அண்மையில் உள்ள பொலிஸ் நிலையம் ஊடாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு அறியத்தருமாறு அப்பெண்ணின் தந்தை அப்துல் கபூர் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe