குவைத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கொலை செய்து வீட்டை கொள்ளையிட்ட இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை வயது 80, தாய் வயது 50, மற்றும் மகள் வயது 18 ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து பெறப்பட்ட கைரேகைகள் மற்றும் தடயங்கள் கொலையாளியின் கைரேகைகள் மற்றும் டிஎன்ஏவுடன் ஒத்துப்போனதையடுத்து கொலையாளி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். கடன் சுமை காரணமாக வீடு புகுந்து கொள்ளையிட முற்பட்டே வீட்டாரை கொலை செய்துள்ளதாக விசாரனையில் அவர் தெரிவித்துள்ளார்.