ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதிகளில் காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு சலுகை காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
01 ஏப்ரல் 2022 முதல் 30 ஜூன் 2022 வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் 6 மாதங்களுக்கும் மற்றும் 01 ஜூலை 2022 முதல் 30 செப்டம்பர் 2022 வரை காலாவதியாகும் உரிமங்கள் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலாவதியாகும் நாள் முதல் இந்த நீட்டிப்பு அமுலுக்கு வரும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அச்சுப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அட்டைகளுக்குப் பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.