Ads Area

34 வருட கால கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள சம்மாந்துறை தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எம். நிஸார்டீன் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா.

34 வருட கால கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள எமது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி, தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும், பிரதி அதிபருமான எம்.எம். நிஸார்டீன் (Bsc, PGDE, SLPS -1) அவர்களின் உன்னத சேவைகளை நினைவு மீட்டி, கௌரவித்துப் பாராட்டுரைப்பதற்கான சேவை நலன் பாராட்டு விழா கடந்த 27.03.2022 (ஞாயிறு) அன்று இடம்பெற்றது.

இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக இவ்விழாவின் கதாநாயகன்  எம்.எம். நிஸார்டீன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு தேசிய பாடசாலையில் நிஸார்டீன் அவர்கள் கடமையாற்றிய காலப்பகுதியில் அதிபர்களாக இருந்த முன்னாள் அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் எமது பாடசாலையின் இந்நாள் அதிபர் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

மேலும் எம்.எம். நிஸார்டீன் அவர்களுடைய குடும்பத்தினர், அவருடன் எமது பாடசாலையில் ஆசிரியர்களாக கடமையாற்றிய ஆசிரிய நண்பர்கள், அவருடைய வகுப்பறையில் கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும்  பாடசாலையின் பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

எம்.எம். நிஸார்டீன் அவர்களின் உன்னத சேவைகளை நினைவு கூர்ந்து கவிதைகள், சிறப்பு பாராட்டு உரைகள் ஆற்றப்பட்டதோடு அன்னார் பொன்னாடை போர்த்தி நினைவுக் கேடயங்கள், பரிசில்கள் மற்றும் பகற்போசனம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

இவ்விழாவை எம்.எம். நிஸார்டீன் அவர்களின் ஆசிரிய நண்பர்கள், அவரது வகுப்பறை மாணவர்கள் மற்றும் எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் என மூன்று குழுக்களாக இணைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

- ஊடக பிரிவு,

பழைய மாணவர் அமைப்பு,

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
















Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe