நூருல் ஹுதா உமர்
அவுஸ்திரேலிய-காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் (AUSKAR) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தரின் 130 வது ஜனன தினத்தை முன்னிட்டு காரைதீவு கோட்டப் பாடசாலைகளுக்கிடையே காரைதீவு இ.கி.மி பெண்கள் பாடசாலையில் நடாத்தப்பட்ட தமிழ் இலக்கியம், ஆக்கத்திறன் போட்டி-2022 இல் மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவி எம்.ஏ.ஸீனத் லிமா முதலாம் பிரிவு கட்டுரைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
வெற்றியீட்டிய மாணவிக்கான ஞாபகச்சின்னமும் பணப்பரிசிலும் காரைதீவு விபுலாநந்தர் மணி மண்டபத்தில் நடபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் அதிதிகளால் வழங்கப்பட்டது. இந்த மாணவி இறுதியாக வெளியான பெறுபேறுகள் அடிப்படையில் புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.