Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் அரச நிறுவனங்களில் உள்ள உத்தியோகத்தர்களுக்கான தீயணைப்பு சம்பந்தமான செயலமர்வு.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் அரச நிறுவனங்களில் உள்ள உத்தியோகத்தர்களுக்கான தீயணைப்பு சம்பந்தமான ஒரு நாள் செயலமர்வு இன்று இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் S.L.முகம்மது ஹனிபா அவர்களின்  ஆலோசனையிலும் உதவி பிரதேச செயலாளர் UM. அஸ்லம் அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில்  அரச நிறுவனங்களில் உள்ள உத்தியோகத்தர்களுக்கான தீயணைப்பு சம்பந்தமான செயலமர்வு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதற்கான களப்பயிற்சி சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி பணிப்பாளர் MAC.ரியாஸ் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான இராணுவ 241 வது  கட்டளை பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் சம்மாந்துறை பிரதேசத்திற்குப் பொறுப்பான தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களான MSM. அஸாறுடீன் மற்றும் MAM. நபீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் . 

மேலும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் இதற்கான ஒத்துழைப்பை வழங்கிமையும் குறிப்பிடத்தக்கது. 









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe