நீண்ட காலமாக பயன்பாடின்றி சேதமடைந்திருந்த செங்காமம் பிணியாய்வு நிலையம் பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்களின் 1 மில்லியன் பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியுடனும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ILM றிபாஸ் அவர்களின் தொடர் முயற்சியின் பலனாகவும் புனரமைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்டமாக பொத்துவில் ஆதர வைத்தியசாலையுடன் இணைந்து வெளிநோயாளர் பிரிவு சேவையை வழங்க இருக்கும் இந்நிலையத்தினை எதிர்காலத்தில் இதர சேவைகளையும் வழங்கும் வைத்தியசாலையாக விஸ்தரிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்றைய (2022-03-21) அங்குரார்ப்பண நிகழ்வு பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி Dr. அப்துல் சமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ILM றிபாஸ் அவர்கள், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் அப்துர் ரஹீம் அவர்கள், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி Dr. றஜாப் அவர்கள், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், பொத்துவில் சுகாதாரப் பரிசோதகர்கள், மற்றும் செங்காமம் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இத்திட்டத்தை செயற்படுத்துவதில் அயராது கருமமாற்றும் கல்முனை பிராந்திய வைத்திய அதிகாரி Dr. ILM றிபாஸ், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி Dr. அப்துல் சமட், பிரதேச சமூக ஆர்வளர்களான Muhammedaliyar Alm Aliyar மற்றும் அவர் குழுவினர்கள் இச்சமயத்தில் நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்கள்.