(நன்றி - தினகரன் திருக்கோவில் நிருபர் )
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பால்சேனையில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்துவந்த பெண் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (18) மாலை கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த வீட்டடை சம்பவதினமான நேற்று மாலை பொலிசார் முற்றுகையிட்டனர் இதன் போது வீட்டில் வளர்த்து வந்த 5 அடி உயரமன கஞ்சா செடியை மீட்டதுடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.