தென்கிழக்கின் அடையாளமாய் திகழும் உலகத் தரத்திலான சிரேஷ்ட விசேட சத்திர சிகிச்சை நிபுணர்கள் இருவர் ஒன்றிணைந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கமெரா தொழிநுட்ப அதியுயர் சத்திர சிகிசைகள் செய்து திறமையான சேவையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மருதமுனையைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் முஹம்மட் சமீம் அவர்களும் நிந்தவூரைச் சேர்ந்த கமெரா தொழிநுட்ப சத்திர சிகிக்சை விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் றசீன் ஆதம் அவர்களும் இணைந்து இந்த சத்திர சிகிச்சையினை மேற்கொண்டுள்ளனர்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசிலையின் முதலாவது சத்திரசிகிச்சை நிபுணராக 2011 ஆம் ஆண்டில் Dr Mohamed Sameem சேவையை ஆரம்பித்து இன்றும் தனது சேவையை உன்னதமாக செய்து வருகின்றார்.