பாலக்காடு : பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோட்டை சேர்ந்தவர் நிமிஷபிரியா, 33. ஏமன் நாட்டில் நர்சாக வேலை செய்து வந்தார்.
கடந்த 2014ல், ஏமனில் ஒரு கிளினிக் துவங்க, அந்நாட்டைச் சேர்ந்த, தலால் அப்துல் மஹ்தி என்பவரிடம் நிமிஷா பண உதவி பெற்றுள்ளார். அவரை ஒருதலையாக காதலித்த தலால், தன் காதலை தெரிவித்தபோது, நிமிஷா மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தலால், நிமிஷாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்தார்.
இந்நிலையில், 2017ல் தலாலுக்கு பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவரை கழுத்தை நெரித்து, நிமிஷா கொலை செய்தார். இந்த வழக்கில், 2018ல் நிமிஷாவுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. துாக்கு தண்டனையிலிருந்து விலக்கு கோரி, நிமிஷா தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்ற பெஞ்ச், நேற்று தள்ளுபடி செய்து துாக்கு தண்டனையை உறுதி செய்தது.