(எஸ்.அஷ்ரப்கான்)
அக்கறைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கர வண்டிச்சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
அட்டாளைச்சேனை, மீனோடக்கட்டுக்கும் பாலமுனைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இவ்விபத்து இன்று பி.ப 02:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது
அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி மாட்டுடன் மோதியதுடன், எதிராக வந்த கனரக வாகனத்திலும் மோதுண்டதால் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதத்துக்குள்ளானதுடன், சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை அக்கறைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.