கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டினர்களையும் அவர்களின் தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல் அவர்களை சவுதிக்குல் நுழைய அமைச்சகம் அனுமதிக்கும் என்று சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், லெப்டினன்ட் கர்னல் தலால் அல்-ஷல்ஹூப் தெரிவித்துள்ளார்.
சவுதிக்கு வரும் வெளிநாட்டினர் யாராவது கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சைக்கான செலவுகளை ஈடுகட்ட அவர்கள் காப்பீடு பெற்றிருப்பது அவசியமாகும். விசிட் வீசா, உம்ரா வீசா, சுற்றுலா வீசா என எந்த விசாவில் சவுதிக்குல் நுழைந்தாலும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் தங்களது சிகிச்சைக்கான காப்பீடுகளை பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு தற்போது எதிர்மறையான PCR சோதனைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை, அதே போல் அவர்களுக்கு தனிமைப்படுத்தல்களும் இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக விலகல் மற்றும் திறந்த இடங்களில் முகமூடி அணிவது உட்பட சவுதியில் நடைமுறையிலிருந்த அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் சவுதி அரசு அண்மையில் நீக்கியிருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.saudi-expatriates.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.