( அஸ்ஹர் இப்றாஹிம்)
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விசேட கராட்டே பயிற்சியும் , கறுப்புப் பட்டி மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சையும் பல்கலைக்கழகத்தின் கராட்டே பயிற்சி நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
சர்வதேச மாஸியலாட் நிறுவனத்தின் ( International Martialart Association ) பிரதம போதனாசிரியரும் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு போதனாசிரியருமான ஏ.ஆர்.முஹம்மட் இக்பால் தலைமையில் இடம்பெற்றது.
கறுப்பு பட்டி கராத்தே பிரிவில் பல தரங்களையும் சேரந்தவர்கள் கறுப்புபட்டியில் இருந்து அதன் அடுத்த தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டார்கள்.