சாய்ந்தமருதில் அமையப்பெற்றுள்ள மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற நிலையத்தை அம்பாறைக்கு கொண்டுபோவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இன்று இடம் பெற்றுள்ளது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான SMM முஷாரப், HMM ஹரீஸ், இஷாக் றஹூமான் மற்றும் அலிசப்றி றஹீம் ஆகியோருக்கும் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடம்பெற்ற சந்தப்பின் மூலம் சாய்ந்தமருது மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற இடமாற்றம் நிறுத்தப்பட்டதோடு தொடர்ந்தும் குறித்த நிலையம் சாய்ந்தமருதிலே இயங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.