மாவடிப்பள்ளி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் இன்று (27-03-2022) ஆரம்பமாயின.
பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வின் போது பாடசாலைக்கான ஒரு தொகுதி தளபாடங்களும், அரிவரி கல்வியை தொடரவிருக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பரிசில்களையும் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.
இதற்கான நிதி பாராளுமன்ற உறுப்பினரின் சாய்ந்தமருது ஒருங்கிணைப்பாளர் அசாம் அப்துல் அஸீஸ் அவர்களின் வேண்டுக்கிணங்க ஒதுக்கப்பட்டிருந்தது.