( தாரிக் ஹஸன்)
ஏசியன் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ASIAN EDO NIGHT TOURNAMENT சுற்றுப்போட்டியில் சம்மாந்துறை விளையாட்டு கழகம் சம்பியன்களானது.
இச் சுற்றுப்போட்டியில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50 கழகங்கள் பங்கு பற்றிய இச்சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு சம்மாந்துறை விளையாட்டு கழகமும் ஏசியன் விளையாட்டுக் கழகமும் தெரிவு செய்யப்பட்டிருந்த்து.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஏசியன் விளையாட்டுக் கழகம் 5 ஓவர்களில் 32 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுக்களை இழந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்மாந்துரற விளையாட்டுக்கழகம் 4.4 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 36 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஜே.எம்.றிகாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்திற்கு சம்பியன் கிண்ணமும் 70,000 ரூபா பணப்பரிசும் , இரண்டாம் இடம் பெற்ற ஏசியன் விளையாட்டுக் கழகத்திற்கு 35,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.