Ads Area

அரையிறுதிப் போட்டியில் காரைதீவு விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம்.

 (  அஸ்ஹர் இப்றாஹிம்  )

சாய்ந்தமருது கிரிக்கட் சம்மேளனம் ஒழுங்கு செய்து நடாத்திக் கொண்டிருக்கும் 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் காரைதீவு விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டு கழகம் 8 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் நேற்று ( 14 ) நடைபெற்ற 61 வது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காரைதீவு விளையாட்டு கழகம் முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய காரைதீவு விளையாட்டு கழகம் 15 ஓவர்களில் 9  விக்கட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய சாய்ந்தமருது பிளாஸ்டர்  விளையாட்டு கழகம் 12  ஓவர்களில் 3  விக்கட்டுக்களை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்று  இறுதிப் போட்டிக்கு  தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டியின் சிநப்பாட்டக்கார்ராக சாய்ந்தமருது பிளாஸ்டர்  விளையாட்டுக் கழகத்தைச் சேரந்த யு.எல்.றில்வான் தெரிவு நெய்யப்பட்டார்.

இவர் துடுப்பாட்டத்தில்ல் 28 ஓட்டங்கரளப் பெற்றதுடன் , பந்து வீச்சில் மூன்று ஓவர்கள் பந்து வீசி 22 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இப்போட்டிக்கு ஓய்வுபெற்ற சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிறை எப்.எம்.அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நௌபீல் ஆகியோர்  அதிதிகளாக  கலந்து கொண்டனர்.

இப்போட்டிக்கு நடுவர்களாக ஏ.எம்.பாஹிர் மற்றும்  ரி.கே.எம்.ஜலீல்  ஆகியோர் கடமையாற்றினார்கள்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe