Ads Area

புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவன் யூசுப் 191 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்.

 ( (எம்.என்.எம். அப்ராஸ் -கல்முனை நிருபர் )

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனையினைச் சேர்ந்த எம்.ஆர்.எம்.யூசுப், 191 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்றுள்ளார். 

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை வெளியாகின. 

இதில் சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலத்தினைச் சேர்ந்த எம்.ஆர்.எம். யூசுப், 191 புள்ளிக்களைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலத்தில்  முதலிடத்தினை பெற்றுள்ளார். 

இதனை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரனும் உறுதிப்படுத்தினார். 

இவர், கொழும்பு பல்கலைக்கழக்தில் பெண் நோயியலில் பட்டப் பின் படிப்பினை மேற்கொள்ளும் டாக்டர் எம்.டி.எம். றிஹான் மற்றும் இஸட்.ஏ.எப். மிர்சானி ஆகியோரின் மூத்த புதல்வராவார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe