Ads Area

இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்தால் இலங்கை மாதிரி நிலைமை தான் ஏற்படும்! ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை.

இலங்கையில் நிலவும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு இன-மத உணர்வுகளை தூண்டும் அந்நாட்டு அரசின் கொள்கையும் ஒரு காரணம் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்த பொருளாதார சரிவின் இன்னொரு கோணத்தை அவர் விவரித்து இருக்கிறார்.

இலங்கையில் தற்போது வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.. இந்த பொருளாதார நெருக்கடி பற்றி எளிதாக சொல்ல வேண்டும் என்றால் பின்வருமாறு இரண்டு வரிகளில் சொல்லிவிடலாம்... டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75.87.. தற்போது போர் காரணமாக பொருளாதார தடையை எதிர்கொண்டு இருக்கும் ரஷ்யாவின் ருபேல் மதிப்பு 104.. ஆனால் எந்த போரையும், உள்நாட்டு மோதலையும் எதிர்கொள்ளாத இலங்கை ரூபாயின் மதிப்பு 264.44!

ஆம் 260 ஐ கடந்து மிக மோசமான வீழ்ச்சியை இலங்கை பண மதிப்பு சந்தித்துள்ளது! அந்த அளவிற்கு இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ந்துள்ளது. 1970ல் இலங்கையில் நிலவிய பஞ்சத்தை விட மிக மோசமான பஞ்சமாக இது பார்க்கப்படுகிறது.

இலங்கை பொருளாதாரம் கொரோனாவிற்கு பின்பாகத்தான் வீழ்ச்சி அடைகிறது என்றும் கூட சொல் முடியாது. ஏனென்றால் கடந்த 4 வருடமாகவே.. அதாவது கொரோனாவிற்கு முன்பே அந்த நாட்டின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியை நோக்கித்தான் சென்று கொண்டு இருந்தது. முக்கியமாக சீனாவிடம் வாங்கிய கடன், சீனாவின் பல்வேறு ரோட் அண்ட் பெல்ட் திட்டத்திற்காக வாங்கப்பட்ட நிதி உதவிகள், அதற்கான வட்டி எல்லாமே இலங்கையின் பொருளாதாரத்தை முடக்கி போட்டது. அதன்பின் வந்த கொரோனா காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றது.

முக்கியமாக கொரோனா சமயத்தில் இலங்கையின் பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்தது. உலக நாடுகள் பல பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்ட நிலையில், சுற்றுலாத்துறையை கணிசமாக நம்பி இருக்கும் இலங்கை படுமோசமான வீழ்ச்சியை சந்தித்தது. அதிலும் டாலருக்கு நிகரான இலங்கையின் ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து கொண்டே சென்றது. கடந்த வருடம் 190 ஐ தாண்டிய இலங்கை ரூபாய் மதிப்பு இப்போது 26 ரூபாயை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.

அந்நாட்டு மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி இதை சரிப்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்தும் எதுவும் அந்த நாட்டுக்கு உதவிகரமாக அமையவில்லை. அந்நாட்டு வரலாற்றில் கடந்த 75 வருடங்களில் இல்லாத நிலைக்கு பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. இதனால் ஒரே வாரத்தில் இரண்டு முறை சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை உதவி கேட்டு கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது. ரஷ்ய போர் காரணமாக இன்னொரு பக்கம் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207.00 ரூபாயாக உள்ளது. சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்கிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 159.00 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 154,566 ரூபாயாக உள்ளது. இந்தியாவில் இன்று இதன் விலை 53,020 ரூபாய் ஆகும். எரிவாயு, எரிபொருள் வரை அனைத்து பொருட்களுக்கும் விலை அங்கே ஏறிவிட்டது. இதனால் அங்கு நிலக்கரி தட்டுப்பாடும், அதை விலையும் உயர்ந்து கடுமையான மின் தடை பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் விலைபட்டியலை பார்த்தால்.. மிடில் கிளாஸ் மக்களுக்கு அல்ல.. பணக்கார மக்களுக்கே தலையை சுற்றும். ஆம்.. இலங்கையில் ஒரு கிலோ சம்பா அரிசி விலை 210 ரூபாய் ஆகும். அதேபோல் 1 கிலோ துவரம் பருப்பு விலை 380 ரூபாய்க்கு ஆகும். கோழி ஒரு கிலோ ஆயிரம் ரூபாய். முட்டை ஒன்று 40 ரூபாய். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 250 ரூபாய், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 450 ரூபாய். தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் 900 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இந்த விலைவாசி உயர்வு காரணமாகவும், வேலைவாய்ப்பு இன்மையாலும் தலைநகர் கொழும்பில் மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இலங்கையின் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோரை எதிர்த்தும் அவர்களின் குடும்பங்களை எதிர்த்து போராட்டத்தை நடத்தி வருகின்றன, பிரதான எதிர்க்கட்சியான எஸ்ஜேபி எனப்படும் Samagi Jana Balawegaya அங்கு தொடங்கிய போராட்டம் அங்கு பெரிய மக்கள் புரட்சியாக வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக பிரதமர் அலுவலகம் முன் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி அங்கு போராட்டம் செய்து வருகின்றனர். அதிபர், பிரதமர் இருவரும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டங்களை செய்து வருகின்றனர். பல லட்சம் பேர் அங்கு கடந்த 4 நாட்களுக்கும் மேலாக போராட்டம் செய்து வருகின்றன. முக்கியமாக வயதானவர்கள் பலர் போராட்டம் செய்து வருகின்றன. ஒரு குச்சியில் இரண்டு பக்கமும் கருகிய பிரட்டை வைத்து போராட்டம் செய்வது இங்கே போராட்ட அடையாளமாகவே மாறியுள்ளது.

இந்த நிலையில்தான் பொருளாதார நிபுணரும், எழுத்தாளருமான ஆனந்த் ஸ்ரீனிவாசன் இலங்கையின் பொருளாதார பிரச்சனையின் இன்னொரு கோணத்தை அணுகி இருக்கிறார். அதாவது பொருளாதார சரிவு என்பதையும் தாண்டி, அந்த நாட்டு அரசின் கொள்கை குறித்தும் அவர் விமர்சனம் செய்துள்ளார். பொருளாதாரம் மீது கவனம் செலுத்தாமல் மத - இனவாதம் மீது கவனம் செலுத்தியதே இந்த சரிவிற்கு முக்கிய காரணம் என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe