அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள மலையடிக்கிராமத்தில் வீடு ஒன்றின் மூன்றாவது மாடியின் மேல் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை இரண்டு கஞ்சா செடிகளுடன் இன்று வியாழக்கிழமை (17) கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்குகிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று பகல் குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் வீட்டின் மூன்றாவது மாடியின் மேல் பூச்சாடிகளுடன் பூச்சாடிகள் வளர்ப்பது போல கஞ்சா செடிகளை வளர்த்துவந்துள்ள இரண்டு கஞ்சா செடிகளை மீட்டதுடன் 33 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஒருவரைகைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
(நன்றி - தினக்குரல் - திருக்கோவில் நிருபர்)