காரைதீவு சகா.
அரசாங்க பாடசாலை மாணவர்களிடமிருந்து புதுவருட விழாக்கள் உள்ளிட்ட எந்த ஒரு வைபவத்திற்கோ, விழாக்களுக்கோ பணம் அறவிடக்கூடாது என கல்வி அமைச்சு ,சகல பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
பாடசாலைகளில் மாணவர்களிடம் அல்லது மாணவர்களின் பெற்றார்களிடம் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் வைபவங்களை காரணம் காட்டி பணம் அறவிடப்படுவதாக கல்வி அமைச்சிற்கு தகவல்கள் கிடைத்தமையையடுத்து இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
பணம் அறவிடுதல் பற்றி இலஞ்ச ஆணைக்குழுவின்.1954 , மற்றும் கல்வி அமைச்சின் 1911 எனும் துரித தொவைபேசிகளுக்கு தகவல் தரமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.