Ads Area

மூதூர் டயமன் விசேட பாடசாலையின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா .

 நூருல் ஹுதா உமர்

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட விஷேட தேவையுடைய மாணவர்கள் கல்வி பயிலும் டயமன் விசேட தேவையுடையோர் பாடசாலையின் 6 ஆவது ஆண்டு நிறைவு விழா டயமன் விசேட தேவையுடையோர் பாடசாலையின் ஸ்தாபகரும் மூதூர் பிரதேச சபை உறுப்பினருமான பாடசாலை அதிபர் அகீதா தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம் ஐய்யூப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பல்வேறு தேவைகள் உடைய மாணவர்களுக்கு சீருடைகள் தனவந்தர்களின் ஒத்துழைப்புடன் அன்பளிப்பு செய்தார். இந்நிகழ்வில் மேலும் மூதூர் பிரதேச சபை தவிசாளர்  எம் எம் ஏ அரூஸ், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் முக்தார், சட்டத்தரணி சீன எம் ஹனான், ஓய்வுபெற்ற அதிபர் மஃரூப், விசேட தேவையுடையோர்கள் பாடசாலையின் ஆசிரியர்களான நகோஸ்வரன் தக்சிகா, தமிழ் செல்வன் வினித்திரா பிராந்திய பிரமுகர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe