Ads Area

விசேட தேவையுடைய மாணவன் தன்வீர் ஆசிப் விரல்களால் வாசிக்கும் முறை மூலம் பரீட்சைக்கு தோற்றி 136 புள்ளிகளைப் பெற்று சித்தி.

 ( அஸ்ஹர் இப்றாஹிம்)

அண்மையில் வெளியிடப்பட்ட 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில்  சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய விசேட தேவையுடைய மாணவன் தன்வீர் ஆசிப் விரல்களால் வாசிக்கும் முறை மூலம் பரீட்சைக்கு தோற்றி 136  புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அம்பாறை மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 100 ஆகும்..

இம்மாணவன் பாடசாலைக்கு முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் போது கண் பார்வை குறைவாகவே இருந்த்தாகவும். பின்னர் ஓரவு சரியானதாகவும் , தொடர்ச்சியாக பாடசாலைக்கு வருகை தந்து க்வி கற்பதிலும் புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் கூடிய கவனம் செலுத்தியதாகவும்  ,70 புள்ளிகளுக்குமேல் 40 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும்  பாடசாலை அதிபர் ஏ.முஹம்மட் அன்சார் தெரிவித்தார்.

1959 இல் ஸ்தாபிக்கப்பட்ட இப்பாடசாலையில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 2018 ஆம் ஆண்டு  2 மாணவர் சித்தியடைந்தே இப்பாடசாலையின் உச்ச சாதனையாகும் .

2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம்  ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் விசேட தேவையுடைய மாணவன் ஆசிப் உட்பட 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அப்துல் அஹத் பாத்திமா ( 161 ) , ஜஹீர்கான் அதீனா ( 155)  , அப்துல் மஜீத் பாத்திமா அஜ்கா ( 155 ) ஆகியோரே இவ்வாறு சித்தியடைந்த மாணவர்களாவாரகள்.

கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் , சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் என்.எம்.அப்துல் மலீக் ஆகியோர் நேரடியாக பாடசாலைக்கு வருகை தந்து இம்மாணவர்களின் சாதனையை பாராட்டி கௌரவித்தனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe