Ads Area

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை கொள்முதல் -!

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சளினை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் இன்று (07) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் தங்காலை பழைய சந்தை வளாகத்தில் ஆரம்பமானது.

கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு கிலோ கிராம் மஞ்சளினை ரூ.165 என்ற அரசின் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்து அதற்கான பணத்தை மஞ்சள் விவசாயிகளுக்கு கௌரவ பிரதமர் வழங்கினார்.

'விவசாயிகளுக்கு உச்ச விலை – நுகர்வோருக்கு நிவாரண விலை' எனும் தொனிப்பொருளிர் இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

பிரியந்த விக்ரமசிங்க, ஷாமா விஜேசிங்க, எம்.ஜி.ஜி தர்மவங்ஷ, பி.எம்.சரத், டபிள்யூ.ஏ.கருணாசேன, யு.ஜி.எதிரிசிங்க, தம்மிக்க சுஜித், நந்தசிறி வணிகசிங்க, அசங்க மதுவந்த மற்றும் நிமல் குணசேகர ஆகிய விவசாயிகளிடமிருந்து கௌரவ பிரதமர் மஞ்சளினை கொள்வனவு செய்து அதற்கான பணத்தினை வழங்கினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, தென்மாகாண சபையின் தலைவர் சோமவன்ச கோதாகொட, மசாலா மற்றும் அதுசார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின் தலைவி குமுதுனி குணசேகர மற்றும் மஞ்சள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் ஊடக பிரிவு



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe