Ads Area

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக நியமனம் பெற்ற விரிவுரையாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை.

 நூருல் ஹுதா உமர்

"சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டவாறு,  ஜனாதிபதியின் திட்டத்தை யதார்த்தமாக்கும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களுடைய எண்ணக் கருவில் உருவான, பல்கலைகழகத்தில் புதிதாக நியமனம் பெற்ற விரிவுரையாளர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கான பயிற்சி பட்டறை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (07.03.2022) திங்கட்கிழமை பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு ஊழியர்கள் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஏ. ஜெஃபர் ஆதம்பாவா தலைமையில் நடைபெற்றது

மேலும் இந்நிகழ்வின் பயிற்சி பட்டறையின் வளவாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டு விரிவுரை நிகழ்த்தினார். தனது விரிவுரையில் நிகழ்காலத்தில் இலங்கை போன்ற நாடுகளில் இத்தகைய விரிவுரையாளர்கள் பணி தொடர்பான, புதிய நோக்கம் , தேவையும் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது தொடர்பிலும் பொறுமையாக விருத்தி செய்ய வேண்டிய சமூக பிரிவினராக விரிவுரையாளர்கள் இனம் காணப்பட்டு உள்ளமை தொடர்பிலும் விரிவுரையாளர்கள் மிக விரிவான பாடத்திட்டங்களை தயாரித்து தொடர்ச்சியாக அவற்றை மீட்டு கொண்டிருத்தல் வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், பல்கலைக்கழக கல்வி நிறுவனங்களில் போதியளவு அறிவை வழங்குதல் மற்றும் போதுமானதன்று, அத்தகைய அறிவை நடைமுறை வாழ்வில் பிரயோகிப்பதற்கான தேர்ச்சிகளை விருத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்துதல்,  சமூக இலக்குகள், சமூக தொழிற்பாடுகள், சமூக அசைவியக்கம், சமூக முன்னேற்றம் போன்ற ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இயங்கியல் நடைமுறைகளில் மையச் சக்கரமாக தொழிற்படும் வினைத்திறனையும், விளைதிறனையும் தீர்மானிப்பவர்கள் விரிவுரையாளர்களே என்றும் விரிவுரையாளர்கள் என்ற நோக்கில் மாத்திரமின்றி சமூக மாற்றங்களை வழிப்படுத்துபவர்கள், விசைப்படுத்துபவர்கள், என்ற முறையிலும் முக்கியமானவர்கள்.

பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் விரிவுரையாளர்கள் இயல்பாக உயரிய சமூகத் தொடர்புகளை பெறுவதால்,  உயரிய சமூக அங்கீகாரத்தைப் பெறுகின்றன.  பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் விரிவுரையாளர்களுக்கான சமூக அந்தஸ்து ஒப்பீட்டு ரீதியில் உயர்வானது என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்தும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணியாற்றுவதற்கான மொழியறிவு, விடய உள்ளடக்கம், கற்பித்தல் நுட்பங்கள் மற்றும் சமூக திறன்கள் என்பன போதுமானதாகயில்லை என்று உணரப்பட்டுள்ளது. புத்துணர்ச்சி நோக்கும்,  தொடர்கல்வி ஊக்கமும்,  பன்மொழித் தேர்ச்சியும்,  தகவல் தொழில்நுட்ப தகமையும், எங்கும் எப்போதும் பணியாற்றும் மனப்பாங்கும்  கொண்டவர்களே விரிவுரையாளராக பணியாற்ற முடியும் என்ற புதிய எண்ணக்கரு வலுப்பெற்றுள்ளது. இவ்வாறு செய்யுமிடத்து விரிவுரையாளர்கள் மாறிவரும் வகிபங்கினை வினைத்திறனுடனும், விளைதிறனுடனும்,  சமூக பொறுப்புணர்வுடனும் நிறைவேற்ற முடியும் இவை தொடர்பான ஆய்வுகளும் எதிர்காலத்தில் ஊக்குவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe