Ads Area

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் மையவாடி சம்மந்தமாக உயர் மட்டக் கலந்துரையாடல்.

 (சர்ஜுன் லாபீர்)

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் மையவாடியில் மண் நிரப்பி புனரமைப்பு செய்வது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் இன்று(9)திடீர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு  பார்வையிட்டார்.

இந் நேரடி கள விஜயத்தின் போது கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,கல்முனை முஹைத்தீன் பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம் ஏ அஸீஸ்,உலமா சபை தலைவர் பீ.எம்.ஏ ஜலீல்(பாகவி),12ம் வட்டார அமைப்பாளர் எம்.எஸ் பழீல்,கடற்கரைப் பள்ளி மையவாடி புனரமைப்பு  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சீ ஸ்டார் விளையாட்டு கழகத்தினர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கள விஜயத்தின்  பின்னர் இது தொடர்பாக கல்முனை மாநகர சபையில் உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில்  குறுகிய காலத்திற்குள் இந்த மையவாடியினை புனரமைப்பு செய்து முடிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தனது நிதி ஒதுக்கீட்டில் இருந்தும்,கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் மற்றும் பெரியபள்ளிவாசலில் நிதியில் இருந்தும் பொதுநல அமைப்புகள் மூலமாக  கிடைக்கப்பெறும் நிதிகளின் ஊடாகவும் உடனடியாக மையவாடியினை புனரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் இன்றே விடுவிப்பு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இவ் உயர்மட்டக் கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம் நிசார்,ஏ.சி.ஏ சத்தார்,கல்முனை பிரதேச செயலாளர், கல்முனை மாநகர பிரதி ஆணையாளர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe