இந்தக்கால அரசியலைப் பொறுத்தவரை முசாரப் எம்பி செல்லும் பாதை சரியானதே...அதனால் சமூகத்துக்கு நல்லதே தவிர தீமை கிடையாது...தலைவர்கள் சொல்வதை போன்று நடந்தால் நமது சமூகத்தின் நிலை தலைகீழாக மாறும்...அதனை மூலதனமாக வைத்து அரசியல் செய்து லாபம் அடைவார்களே தவிர சமூகத்தை காப்பாற்றவேண்டும் என்ற சிந்தனை அவர்களிம் அறவே இல்லையென்றே கூறவேண்டும்.....
எது எப்படியிருந்தாலும் முசாரப் எம்பி ஒரு அவசர குடுக்கை என்பது மட்டுமல்ல கூட்டத்தை கண்டால் உணர்ச்சிவசப்படுபவர் என்பதுதான் இங்கே கவணிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்....மைக்குக்கு முன்னால் பேசுகின்றபோது அது பதிவு செய்யப்படுகின்றது என்பதை மறந்து தனது வாய்க்கு வந்தமாதிரியெல்லாம் பேசுவது பிறகு மாட்டிக்கொள்வது...அரசியலில் இதெல்லாம் சகஜம்தான் என்றிருந்தாலும் புதிதாக வந்த முசாரப் அவர்களை மக்கள் வேறுகண்கொண்டே பார்த்தார்கள்...படித்தவர், நேர்மையானவர், கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர், போதிய வருமானம் இன்றி கஸ்டப்படுபவர், அரசியலில் ஓரளவு அறிவு கொண்டவர், அரசியல் ஞாம்பவான்களிடம் தைரியமாக கேள்வி கேட்ககூடியவர்., முன்னுக்கு பின் முரணாக பேசாதவர், பணத்துக்கு ஏமாந்து செயல்படாதவர் என்றெல்லாம் மக்களின் மனதில் பதியப்பட்டவர்....
இப்படியான சிந்தனைகொண்ட முசாரப் அவர்கள் எம்பியாக வந்தால் நல்லது என்ற காரணத்துக்காகவே அம்பாரை மாவட்டத்திலுள்ள மக்கள் 16ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை கொடுத்து எம்பியாக்கினார்கள்...எம்பியான சந்தோசத்தில் பொத்துவில் பெரிய பள்ளிவாசலுக்கு வந்த முசாரப் எம்பியவர்கள் உணர்ச்சிவசப்பட்டவராக பல வாக்குறுதிகளை அள்ளிக்கொட்டினார்... அதில் ஒன்றுதான் எனக்கு கிடைக்கும் கார் பேமிட்டை விற்பதனால் வரும் பணத்தை பொதுமக்களுக்கே செலவு செய்வேன் என்பதாகும்...(இது சாத்தியப்படாத ஒன்று என்பதை அன்றே நான் கூறியிருந்தேன்) இந்த வீடியோ இன்றும் உலாவருகின்றது....இங்கே கவணிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், முசாரப் எம்பியாவதற்கு முன்பு எப்படியிருந்தார்., அவருடைய பொருளாதார நிலைமையென்ன, என்பதையெல்லாம் பொத்துவில் தொகுதி மக்கள் அறிந்தே வைத்திருந்தார்கள்...அப்படிப்பட்ட மக்கள் முசாரப் எம்பியின் இன்றய பொருளாதார நிலையை ஒப்பிட்டு பார்க்கின்றபோது அவர்களுக்கு இவருடைய நிலை உயர்ந்து செல்வதாகவே காண்கின்றார்கள்...இந்த வசதி வாய்ப்புக்கள் அரசாங்கத்துடன் சேர்ந்ததனால் வந்ததா? அல்லது அவரது தனிப்பட்ட வியாபாரத்தின் மூலம் வந்ததா? என்று புரியாமல் உள்ளது...இந்த சந்தேகமானது முசாரப் எம்பி அரசாங்கத்துடன் சேர்ந்ததனால்தான் வந்தது என்று என்னுவதற்கே கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு, அதனை யாரும் நிராகரித்துவிடவும் முடியாது...
அண்மையில் ஒன்றை அவதானித்தேன் அவர் கோடிக்கணக்கான தொகைகொண்ட வங்கி காசோலைகளை வரைந்துள்ளார் என்பதை....இது எதனால் வந்தது என்று அவரால் நிரூபிக்க முடிந்தாலும், எம்பியாவதற்கு முன் இப்படியான தொகைகளை அவரது வங்கி கணக்கு கண்டிருக்குமா என்பதை அவரது ஊர்மக்களும் அவரோடு நெருங்கி பழகிய மக்களும் அறிந்திருப்பார்கலென்றால் அவர் பணக்காரர் வரிசையில் உள்ளவர் என்பதை அறிந்திருப்பார்கள்...அவர் பணக்காரர் வசதியுள்ளவர் என்று யாரும் இவரைப்பற்றி கூறியதாக காணக்கிடைக்கவில்லை....ஆனால் எம்பியானதன் பின்பும், அரசாங்கத்தோடு சேர்ந்ததன் பின்பும் இப்படியான தொகைகள் பரிமாற எப்படி முடிந்தது என்ற கேள்விகளுக்கு விடை காண்பது கடினமாகவுள்ளது....இது வியாபாரத்தின் ஊடாகத்தான் வந்தது என்று நிரூபிப்பதும் கடினமானது...உண்மையில் எம்பியாவதற்கு முன் வியாபாரத்தின் மூலம் கோடிக்கணக்கில் பரிமாறிய ஒருவரென்றால் பரவாயில்லை...அரசாங்கத்துடன் சேர்ந்ததன் பின்தான் இப்படியான தொகைகள் பரிமாறப்படுகின்றது என்கின்றபோது அது பிழையான செய்தியையே சொல்லி நிற்கின்றது என்றே கூறவேண்டும்...கள்ளுக் கடைக்கு பக்கத்தில் நின்று பால் குடித்தாலும் அது கள்ளுக்குடிப்பது போன்றே அர்த்தப்படும்....அதற்குத்தான் இடம் பொருள் அறிந்து செயல்படவேண்டும் என்று முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளார்கள்....
ஆக முசாரப் எம்பியவர்கள் எவ்வளவுதான் நல்லவிடயங்கள் செய்தாலும் இப்படியான செயல்பாடுகள் அவரது நற்பெயருக்கும், அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் கலங்கம் ஏற்படுத்துவது போன்றே உள்ளது...அதேநேரம் அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிப்பது சமூகத்தின் நண்மைக்காகவே என்று கூறுவதும் கேள்விக்குள்ளாகின்றது என்றே கூறவேண்டும்....இப்படியான தவறுகள் இல்லாதுவிட்டால் முசாரப் எம்பியின் நம்பக தண்மையானது யாராலும் கேள்விக்குட்படுத்த முடியாத ஒன்றாகவே இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே கொள்ளத்தேவையில்லை...அவரது அரசியல் எதிர்காலமும் பிரகாசமானதாக இருந்திருக்கும்....ஆனால் தற்போதைய செயல்பாடுகள்...????...புரிந்தால் சரிதான்..??
கல்முனை - இப்றாஹிம் ஹாஜியார் (அரசியல் விமர்சகர்)