சம்மாந்துறை அன்சார்.
பக்ரைன் தலைநகர் மனமாவின் அட்லியா பகுதியில் இந்திய உணவகமான லான்டன்ஸ் ரெஸ்டாரண்ட் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து உணவு சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ரெஸ்டாரண்ட்டுக்கு முஸ்லிம் பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்தார். அப்போது ரெஸ்டாரண்ட் சார்பில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தன்னை அனுமதிக்கும்படி கேட்டு கொண்டார். ஆனால் ரெஸ்டாரண்ட் நிர்வாகம் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியானது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரயைடுத்து ரெஸ்டாரண்ட்டுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். சுற்றுலா நிறுவனங்கள் தொடர்பான 1986ம் ஆண்டுக்கான ஆணைச் சட்டம் 15ன் படி ரெஸ்டாரண்ட் மூடப்பட்டுள்ளதாக பக்ரைன் நாட்டின் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையம் கூறியுள்ளது.
இந் நிலையில் இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிராக செய்லபட்ட இந்திய உணவகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமீரக இளவரசி தனது டிவிட்டர் பக்கத்தில், “இஸ்லாமிய நாட்டில் இனவெறி வரவேற்படமாட்டாது” என்றும் ஹேஷ்டேங் #Islamophobia என்றும் பதிவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் ஹிஜாப் அணிந்து வந்த பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் வாசலிலேயே நிற்க வைத்த கொடுமை இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இஸ்லாமிய மாணவிகளுக்கு அச்சுறுத்துத்தல் ஏற்படுத்தும் வகையில் காவி துண்டு அணிந்து வந்த மாணவர்களால் பதற்றமான சூழல் உருவானது.
இந்நிலையில் கர்நாடகாவில் நடந்தது போலவே அரபு நாடான, பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த இந்திய உணவகத்தை அந்நாட்டு அதிகாரிகள் மூடி சீல் வைத்துள்ளனர்.