சம்மாந்துறை சென்னல் ஷாஹிரா மகாவித்தியாலயத்தில் தரம் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, கல்வி பொது தராதர சாதாரண தர பரிட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகியவற்றில் சிறப்பு சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ,அதிபர் யூ.எம். இஸ்மாயில் அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக ஏ.எல்.ஏ மஜீட் உதவி கல்வி பணிப்பாளர் அவர்களும் விஷேட அதிதிகளாக கோட்ட கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. சபூர்தம்பி அவர்களும் பாடசாலையின் முன்னாள் அதிபர்களான எம்.ஐ. மீரா முகைதீன் பிரதி அதிபர் ஏ. றிஸ்வான் அவர்களும் மற்றும் வலயக் கல்வி அலுவலக பிரதிநிதிகள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வின் போது கடந்த 2020 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 6 மாணவர்களும் 2021ஆம் ஆண்டு சித்தியடைந்த ஒரு மாணவியும் மற்றும் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் A சித்தியை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் ஏ.எல்.எம். பசூர், ஏனைய சிறப்பு சித்திகளை பெற்ற மாணவர்கள் அத்துடன் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி எம்.எப். அஸ்கா ஆகியோர் கௌரவிக்கப்பட்டானர்
மேலும் இந்நிகழ்வின் போது சாதனையாளர் மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
ஊடக பிரிவு
செந்நெல் ஸாஹிரா ம.வி