சம்மாந்துறை அன்சார்.
வெளியேறும் மற்றும் மறு நுழைவு விசாக்களை ரத்து செய்பவர்கள், தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெற முடியாது என சவுதி அரேபிய பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் (ஜவாசாத்) தெரிவித்துள்ளது.
பயனாளியால் வெளியேறும் மற்றும் மறு நுழைவு விசாக்களில் திருத்தங்கள் செய்ய முடியாது ஆனால் அவர்கள் விரும்பினால் அதனை முதலாளியின் அப்ஷர் தளம் மூலம் ரத்து செய்ய முடியும் என்று ஜவாசத் தெரிவித்துள்ளது.
பயனாளி எக்சிட்-ரீஎன்றி விசாவினை மீண்டும் வழங்கியிருந்தாலும் கூட, வெளியேறும் மற்றும் மறு நுழைவு விசாக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டால் திருப்பிச் செலுத்த முடியாது என்று ஜவாசத் உறுதி செய்துள்ளது.
மேலும் விசிட் விசாவில் வருவோர் தங்களது விசிட் விசாக்களை வதிவிட அனுமதிகளாக அதாவது வேலை செய்யும் விசாக்களாக (Working visa) மாற்றுவதற்கு அனுமதி இல்லை என்றும் ஜவாசத் வலியுறுத்தியது.