Ads Area

புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய மாணவி சம்மாந்துறை வலயத்தில் முதலிடம்.

 (அகமட் எஸ். முகைடீன்)

சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய மாணவி முகம்மட் பாயிஸ் ஸுஹா தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை வலயத்தில் முதலிடம் பெற்றமையினை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் நேற்று திங்கட்கிழமை (14) குறித்த பாடசாலைக்கு நேரில் சென்று வாழ்த்தினார்.

இம்முறை வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 இல் எம்.எம். முகமட் பாயிஸ் மற்றும் என் சாஜிதா ஆகியோரின் புதல்வி முகமட் பாயிஸ் ஸுஹா 182 புள்ளிகளைப் பெற்று சம்மாந்துறை வலயத்தில் முதலிடத்தை பெற்றுள்ளதோடு இப்பாடசாலை மாணவர்கள் 19 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இப்பாடசாலைக்கும், சம்மாந்துறை வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களுக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் மாலை அணிவித்து பாராட்டினார். அத்தோடு விஷேட தேவையுடைய இப்பாடசாலை மாணவர்கள் இருவர் குறித்த பரீட்சையில் சித்தியடைந்துள்ளமையினை மெச்சினார்.  

மேலும் இம்மாணவர்களின் சிறந்த அடைவிற்காக அயராது உழைத்த இப்பாடசாலை அதிபர் அஷ்ஷேஹ் எம்.ஐ.எம். கலீல் மற்றும் ஆசிரியர்களான மஜீதா தாசிம், ஏ.எல் நிறோசின், எம்.எச். றிஸ்வி ஜாரியா ஆகியோரை பாராட்டியதோடு எதிர் காலத்தில் இப்பாடசாலை மென்மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும் எனவும் வாழ்த்தினார்.      

வலயக்கல்விப் பணிப்பாளரின் இவ்விஜயத்தின்போது சம்மாந்துறை வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல். அப்துல் மஜீட், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. சபூர்த்தம்பி, ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். அப்துல் கபூர் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe