கமு/சது/ புதுநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை - 2021 இல் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். த. மதுஸ்கா - 181, ஜெ. பவிசாளினி - 158, ஜெ. டிஷானுஜன் - 157, இ. அட்சகன் - 154, ஜெ. ஹிவிக்க்ஷன் - 150, ச.ஹரித்ரா - 149 ஆகிய மாணவர்களே சித்தியடைந்துள்ளனர்.
விசேடமாக த. மதுஸ்கா எனும் மாணவி 181 புள்ளிகளைப் பெற்று சம்மாந்துறை வலயத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் தோற்றிய 22 மாணவர்களில் 20 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 91% விதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கதாகும்.
மாணவர்களுக்கு தரம் 5 இல் கற்பித்த ஆசிரியர் T. விமலகீதன், தரம் 1 - 4 வரை கற்பித்த ஆசிரியர்கள், அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.