வாகரை பிரதேச மக்களின் நலன் கருதி கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் வாகரை நீதி நிர்வாக பிரிவுக்கான அலுவலகம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (2022.03.15) திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வானது திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி ரிஸ்வானி ரிபாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண சுகாதார சுதேச வைத்திய, சமூக சேவைகள், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள், மற்றும் கிராமிய மின்மயமாக்கள் அமைச்சின் செயலாளர் திருமதி.ஜே.ஜே. முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாகவும், ஏனைய அதிதிகளாக வாகரை பிரதேச செயலாளர் எந்திரி திரு.ஜீ.அருனன், திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திருமதி. சரண்யா சுதர்ஸன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட்ட நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எச்.நயீமுத்தீன் அவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் திணைக்களத்தின் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.