Ads Area

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் பல மாதங்களாக அகற்றப்படாத கழிவுகள்.

 (அஸ்ஹர் இப்றாஹிம் )

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது குடியேற்ற கிராமமான பொலிவேரியன் பிரதேசத்தின் மேற்புறமாகவுள்ள பிரதேசத்திலும்  , பாலத்திற்கு அருகாமையிலும் குப்பைகள்  பல மாதங்களாக அகற்றப்படாமல் குவிந்து காணப்படுகின்றது.

மக்கள் நடமாட்டமுள்ள இப்பிரதேசத்தில் பொது மைதானம் , விவசாய விரிவாக்கல் அலுவலகம் , சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் , கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் , கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயம் , ஹிஜ்ரா பள்ளிவாசல் போன்ற பல முக்கிய  காரியாலயங்களும் , அரச நிறுவனங்களும் அமையப் பெற்றுள்ளன.

மக்களால் கொட்டப்படும் குப்பைகள் கல்முனை மாநகரசபையினால் அகற்றப்படாமையினாலேயே மாதக்கணக்கில் இக்குப்பைகள் குவிந்து கிடப்பதற்கு காரணமாகும்..

இந்த பகுதியில் மிருகங்களின் கழிவுகள் , வீட்டு கழிவுகள் என்பன வீசப்படுவதனால் கட்டாக்காலி மாடு , ஆடு , நாய் , புனை என்பனவற்றாலும்   , காகம்  , கோழி போன்ற பறவைகளினாலும்  இக்குப்பைகள் பல இடங்களுக்கும் பரப்பப்பட்டுள்ளதால்  துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் இப்பிரதேச மக்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தத் தவறினால் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் பிரமாண்டமான குப்பை மேடு உருவாவதனை எவராவும் தடுக்க முடியாது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe