சம்மாந்துறை அன்சார்.
வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் படி சம்மாந்துறை கல்வி வலயத்தில் த.மதுஸ்கா எனும் மாணவி 181 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சம்மாந்துறை மல்வத்தை புதுநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்ற மாணவியே இவ்வாறு சாதனை புரிந்துள்ளார். இப் பாடசாலையில் ஆறு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
இதேவேளை சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய மாணவி முகம்மட் பாயிஸ் ஸுஹா தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை வலயத்தில் முதலிடம் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும் - தொடர்பான செய்திக்கு https://www.sammanthurai24.com