Ads Area

அஜித் நிவாட் கப்ராலுக்கு மே மாதம் 2 ஆம் திகதி வரை வெளிநாட்டுப் பயணத்தடை.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு கப்ரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவ்ல உத்தரவிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வழங்கப்பட்ட அழைப்பாணையின் பிரகாரம் CBSL முன்னாள் ஆளுநர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe