Ads Area

குவைத்தில் புகைப்பிடிப்பதால் ஆண்டு தோறும் 3,000 க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் உயிரிழப்பு.

புற்றுநோய் எதிர்ப்புக் குழுவின் இயக்குநர்கள் குழுவின் தலைவரும், தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார இயக்குநருமான டாக்டர் காலித் அல்-சலேஹ் கூறுகையில், குவைத்தில் ஒவ்வொரு ஆண்டும் 25% இறப்புகள் புகைபிடித்தல் தொடர்பான நோய்களால் ஏற்படுகின்றன.  இவற்றில் 3,000க்கும் அதிகமான இறப்புகள் புகைபிடித்தல் தொடர்பான நோய்களால் ஏற்பட்டதாக மேலும் அவர் கூறினார். 

குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்காக ஆண்டுதோறும் பெரும் தொகை செலவிடப்படுகிறது.

குவைத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது.  நாட்டில் 49.9% ஆண்களும் 4.4% பெண்களும் புகைப்பிடிப்பவர்கள்.  அதே சமயம் குழந்தைகள் புகைப்பிடிக்கும் விகிதம் அதிகமாக உள்ளது. நாட்டில் 46% குழந்தைகள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.  இதில், 10 சதவீதம் பேர் 'ஹூக்கா' பயன்படுத்துகின்றனர், 13 சதவீதம் பேர் சிகரெட் பயன்படுத்துகின்றனர், 23 சதவீதம் பேர் இரண்டையும் பயன்படுத்துகின்றனர், என்று தெரிவித்துள்ளார்.

தகவல் - குவைத் தமிழ் சோசியல் மீடியா



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe