இலங்கையில் தங்கத்தின் விலையில் தற்போது சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்கத்தின் விலை சற்று குறைந்திருப்பதாக இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
செட்டியார் தெருவின் இன்றைய தங்க நகை விலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 190,000 ரூபாயும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 175,000 ரூபாயும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 200000 க்கு மேல் விலை போனமை குறிப்பிடத் தக்கதாகும்.