பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட பத்தரமுல சீலரத்ன தேரர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லே சீலரதன தேரர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகமாக குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தார் இந் நிலையில் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிக்குவை பேச அனுமதிக்க மறுத்ததுடன், அவரை அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுத்தனர்.
போராட்டக்காரர்களால் வெளியேறுமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, பத்தரமுல்லே சீலரதன தேரர் போராட்டத்தை கைவிட்டு வெளியேறினார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.