Ads Area

ஜனாதிபதியின் இடைக்கால அரசாங்க கோரிக்கையை நிராகரித்தது எதிரணி - ராஜபக்ஷக்களின் கீழ் எந்த பதவியையும் ஏற்க மாட்டோம் எனவும் தெரிவிப்பு.

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) நிராகரித்துள்ளது.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய SJB பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, “பொதுமக்களின் வேண்டுகோள் கோட்டா வீட்டிற்கு செல்ல வேண்டும், நாங்கள் அந்த போக்கை ஆதரிப்போம் மற்றும் ராஜபக்ஷக்களின் கீழ் எந்த பதவியையும் ஏற்க மாட்டோம்” என்றார்.

ராஜபக்ச அரசின் பதவிக்காலத்தின் கடைசி சில நாட்கள் இது என்று கூறிய அவர், மீண்டும் ஆட்சியைப் பெறுவதற்கு SJB எந்த வகையிலும் உதவாது என்றார்.

“பொதுமக்கள் கோட்டாவை வீட்டுக்குச் செல்லுமாறும், ராஜபக்சக்களை வீட்டுக்குப் போகுமாறும் அழைப்பு விடுக்கின்றனர். பொதுமக்களின் அழைப்புக்கு நாங்கள் துணை நிற்கிறோம்” ராஜபக்சக்களுடன் அல்லது ராஜபக்சக்களுடன் இருந்தவர்களுடன் இணைந்து பணியாற்ற SJB க்கு விருப்பமோ தேவையோ இல்லை என ராஜித் சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

SJB தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்துடனும் பொதுமக்களின் அங்கீகாரத்துடனும் மட்டுமே SJB அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

“அது ஜனாதிபதித் தேர்தலாகவோ, நாடாளுமன்றத் தேர்தலாகவோ அல்லது உள்ளூராட்சித் தேர்தலாகவோ இருக்கலாம். பொதுமக்களின் ஆசியுடன் மட்டுமே ஆட்சி அமைப்போம்,'' என்றார்.

ராஜபக்சக்களை இராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்த ராஜித., அரசாங்கம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe