அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு போராட்டத்திலும் கலந்து கொள்வதற்கு ஒரு வார காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
நாளை (29) முதல் 14 நாட்களுக்கு அரச எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு களுவாஞ்சிக்குடி நீதவான் உத்தரவிட்டுள்ளதாக சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
"நீதிமன்ற உத்தரவின்படி, என்னால் போராட்டங்கள் நடத்தப்படக்கூடாது, என்னுடன் தொடர்புடையவர்கள் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் போராட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது" என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கூறினார்.
நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் வேளையில், களுவாஞ்சிகுடி பொலிஸ் பொறுப்பதிகாரி தமக்கு எதிராக நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் ஒரு சட்டமா அல்லது தமிழர்களுக்கு வேறு சட்டமா என கேள்வி எழுப்பிய எம்.பி., தமிழர்களுக்கு வேறு சட்டங்கள் என்ற நீண்டகால கேள்வி களுவாஞ்சிக்குடி பொலிஸ் பொறுப்பதிகாரியின் நடவடிக்கையின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது நாட்டின் பல பிரதேசங்களில் மக்கள் வீதிகளில் இறங்கியிருக்கும் நிலையில் இந்த நீதிமன்ற உத்தரவைப் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதுபோன்ற நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பித்து பொதுமக்களின் சுதந்திரத்தை தடை செய்வதன் மூலம், அவர்களை வெளியேற்றும் துணிச்சலைத்தான் அரசு பொதுமக்களுக்கு அளிக்கிறது என்றார்.
இன்றைய தினம் எந்தவொரு போராட்டத்திலும் கலந்துகொள்ள தாம் உத்தேசித்திருக்கவில்லை என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன், ஜனாதிபதி பதவி விலகும் வரையில் பொது மக்கள் போராட்டங்களுக்கு தமது ஆதரவு தொடரும் எனவும் தெரிவித்தார்.
(நியூஸ் வயர்)
வீடியோ - https://www.youtube.com/watch?v=TtNx6yvnZ7g