Ads Area

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் !

 (எம்.என்.எம். அப்ராஸ் )

மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துமாறும் அடக்குமுறைகள் நிறுத்தப்பட்டு நாட்டைப் பாதுகாக்குமாறு ,சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டியும் கோரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்கின்றது.

இந்நிலையில் அம்பாரை மாவட்டம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்தியர்கள்,தாதி உத்தியோகத்தர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு இன்று மதியம் வைத்தியசாலை முன்றலில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை இன்று (28) முன்னெடுத்தனர்.

வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோசங்களை எழுப்பியவாறும்,கோ ஹோம் கோட்டா ,ஊழல் அரசு வேண்டாம்,நிதி நெருக்கடியால் உயிர்களை கொள்ளாதே, தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள் சுகாதார சேவை கட்டமைப்புக்கு நிதியை முன்னுரிமை அளிக்கவும், சுகாதார சேவைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்காதே, வேண்டாம் வேண்டாம் ஊழல் அரசு,இலவச சுகாதாரம் ஆபத்தில் உள்ளது, அனைவரது உயிரும் ஆபத்தில் உள்ளது, ஆகிய வசனங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை வெளிப்படுத்தி தமது எதிர்ப்பினை வெளியீட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

அத்துடன் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினுடாக நடை பவனியாகச் சென்ற ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த தமது எதிர்ப்பு நடவடிக்கையின் போது கருப்பு நிறத்திலான பட்டியினை கட்டியவாறும் சிவப்பு நிறத்திலான பட்டியினை கழுத்தில் அணிந்திருந்தவாறும்,பதாகைகள் என்பவற்றை எரித்து எதிர்ப்பில் ஈடுபட்டனர். 











Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe