ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் மகள் எங்களுக்கு எந்தவிதமான நிதியுதவியும் தேவையல்லை எங்களது தந்தையின் மரணத்திற்கு நீதிதான் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மரணமடைந்தவரின் மகள், தனது தந்தை போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை பெறுவதற்காகவே அவர் சென்றதாகவும் தெரிவித்தார்.
போராட்டத்திலிருந்து விலகி நிற்கும் போது தனது தந்தை காவல்துறையினரால் சுடப்பட்டதை மற்றொரு நபர் பார்த்ததாக அவர் மேலும் கூறினார்.
42 வயதான கே.டி.லக்ஷான், செவ்வாய்கிழமை (19) எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.