Ads Area

அரசியலமைப்பின் புதிய திருத்தத்திற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்தார் சஜித் பிரேமதாச.

அரசியலமைப்பின் புதிய திருத்தத்திற்கான முன்மொழிவுகளைக் கொண்ட வரைவு ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (21) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கான சட்டமூலத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து கையளித்தார். அதன் பின்னர் குறித்த வரைவு சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு, கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலை முறை தொடர்பான முத்தரப்பு அதிகாரப் பகிர்வுக்கான திருத்தம், 20 ஆவது திருத்தத்தை இல்லாதொழித்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல், தேசிய பாதுகாப்பு கவுன்சில் அமைப்பது போன்ற பல ஜனநாயக பண்புகளை குறித்த வரைவு கொண்டுள்ளது.

சஜித் பிரமேதாசா - ஊடகப் பிரிவு.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe